மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக புதிதாக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி கேணல் பிரதீப்களுபான மற்றும் லெப்டினன் கேனல் இந்திக குமார ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயத்தை மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகத்துக்கு மேற்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ கட்டளை அதிகாரி கேணல் பிரதீப்களுபான மற்றும் லெப்டினன் கேனல் இந்திக குமார ஆகியோர் உத்தியோக பூர்வ சந்திப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
கலந்துரையாடலின் போது மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இதன் போது அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் சந்திம குமர சிங்க இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில் மட்டக்களப்பு கல்லடி 243 இராணுவ படை பிரிவுக்கு புதிய இராணுவ கட்டளை அதிகாரியாக கேனல் பிரதீப் களுபான கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிகழ்வில் கேணல் தம்மிக்க வீரசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇