மதகு வழங்கும் ஆரோக்கிய தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

பாத வெடிப்பு பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை….

எம்மில் சிலர் காலணிகளை அணியாமலும் அல்லது சொக்ஸ் அணியாமல் ஷூவை அணிந்தும் நடப்பர். இதன் காரணமாக அவர்களுடைய பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும்.

இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் பாத பகுதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி மனதளவில் சிக்கலை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

எம்மில் பலரும் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் முகம், கை ஆகியவற்றுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தருவோம். ஆனால் பாதத்திற்கு போதிய அளவிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. பாதத்தை நாளாந்தம் சீராக பாதுகாக்கவில்லை என்றால் அவர்களுக்கு பித்த வெடிப்பு என அழைக்கப்படும் பாத வெடிப்பு பாதிப்பு உண்டாகும்.

வறண்ட சருமம், பாரம்பரிய மரபணு குறைபாடு, உடல் பருமன், நீரிழிவு நோய், தைராய்டு பாதிப்பு என பல்வேறு காரணங்களால் பாதத்தில் வெடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தொடக்க நிலையிலேயே அதற்கு சிகிச்சை பெற வேண்டும்.

வைத்தியர்கள் இதற்கு பிரத்யேக கிறீம்கள், சொக்ஸ் அணிந்து உறங்குவது போன்ற சில நிவாரணங்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். நாளாந்தம் இரவு உறங்குவதற்கு முன் இரண்டு கால்களையும் பத்து நிமிடத்திற்கு எப்சம் எனும் உப்பின் உதவியுடன் கணுக்கால் அளவிற்கான சுடுநீரில் பாதத்தை வைத்து விட வேண்டும்.

அதன் பிறகு பாதத்தை நல்ல சுத்தமான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும். அதன் பிறகு வைத்தியர் பரிந்துரைக்கும் கிறீம்களை பூசிக் கொள்ள வேண்டும்.

மேலும் வைத்தியர்கள் பரிந்துரை செய்திருந்தால் உறங்கும் முன் சொக்ஸ் அணிந்து உறங்க வேண்டும். இதனை முறையாக கடைப்பிடித்தால் நாளடைவில் பாத வெடிப்பு பாதிப்பு குறையும்.

இதனை கவனியாது விட்டால் பாத வெடிப்பு அதிகமாகி இரத்தக் கசிவு ஏற்பட்டு அச்சுறுத்தும் அளவிற்கான பாரிய பக்க விளைவை ஏற்படுத்தும். அத்துடன் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமலும் வைத்தியரின் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும். இதனை உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் கடைப்பிடித்து வந்தால் பாத வெடிப்பு பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம்.

வைத்தியர் வேணி

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects