தலைமன்னாருக்கான புகையிரத சேவை 11 மாதங்களின் பின்னர் நாளை (12.11.2024) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான முதலாவது தொடருந்து , நாளை (12.11.2024) மாலை 4:15 இற்கு புறப்படும் எனத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே இதனைத் தெரிவித்துள்ளார்.
நேர அட்டவணையின்படி , குறித்த புகையிரதம் இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇