மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவி செல்வி சுஜீவாவின் தலைமையில் கல்லடி கடற்கரை மற்றும் திருச்செந்தூர் கோவில் வரையிலான பகுதியில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் எனும் தொனிப்பொருளில் 17.11.2024 அன்று சிரமதானப்பணி நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் நிஷாந்தினி அருள்மொழி, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் சசிகுமார், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் தயாசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந் நிகழ்விற்கான பங்களிப்பினை ஜனதாக்ஷன் (Janathakshan) அமைப்பானது வழங்கியிருந்ததுடன் அவ் அமைப்பின் கள உத்தியோகத்தர் Felishta Mathuvanthi , இயற்கைமொழி அமைப்பின் ஸ்தாபகர் காயத்ரியும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலிருந்து சுற்று சூழலியல் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசாந்தினியும் கலந்துகொண்டனர்.
அத்தோடு மண்முனை வடக்கு பிரதேச சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டதோடு மண்முனை வடக்கிலிருந்து மொத்தமாக 45க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து தங்களது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇