எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் பங்குபற்றவிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் மு.ப 9.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்திற்கு வருகைதருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வரும்போது உறுப்பினர்களின் வாகனங்கள் பொலிசாரால் அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிறுத்தலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களின் கூடங்களில் நுழைவதுடன் வாக்கழைப்பு மணியோசை அடிக்கும் வரை அங்கு தங்கியிருத்தல் வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துணைவி அல்லது துணைவரோடு வருகின்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் நுழைவாயில் அருகில் இறங்க வேண்டும், மற்ற எல்லா உறுப்பினர்களும் உறுப்பினர்களின் நுழைவாயிலின் அருகில் இறங்க வேண்டும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇