கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் மத்தியஸ்த சபை செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி வழங்கும் நிகழ்வானது 16.10.2023 அன்று பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
அதற்கிணங்க மத்தியஸ்த சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத்தேர்வுகள் நடாத்தப்பட்டு, அதில் தெரிவு செய்யப்பட்டோருக்கான 05 நாள் பயிற்சிப் பட்டறையாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மத்தியஸ்த நுட்ப முறை மற்றும் உபாயங்கள் தொடர்பாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஆஸாத், வவுனியா மாவட்ட செயலக மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.விமலராஜ் மற்றும் கோறளைப்பற்று மத்தி மத்தியஸ்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எல்.ஆஸாத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇