கேரளா – கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் இன்று (20.11.2024) முதல் செயற்படவுள்ளது.
இந்தியாவிலேயே முதலாவது முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை , கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கேரள உச்ச நீதிமன்றத்தில் நடந்த விழாவின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்துள்ளார்.
இந் நிலையில் இன்று (20.11.2024) முதல் அது செயற்பாட்டுக்கு வருகின்றது.
இந் நீதிமன்றத்தில் மக்கள் 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
பிணை பெறுவதற்குக் கட்சிக்காரர்கள் மற்றும் பிணைதாரர்கள் முன்னிலையாகத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் பிணையைப் பெறுவதற்கான ஆவணங்களை இணையம் மூலம் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇