இலங்கையில் வணிக ரீதியாகவும், ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் பயிரிடப்படும் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகிய பயிர்செய்கைகளுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த காப்பீட்டுத் திட்டங்களை விவசாய அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளன.
அதன் அடிப்படையில், இயற்கை பேரழிவுகள், நோய் தாக்கங்கள், பூச்சி சேதம் மற்றும் காட்டு யானை தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, இக் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி, இஞ்சிக்காக ஏக்கருக்கு 2 இலட்சம் ரூபாய் வரையும், மஞ்சள் பயிர்ச்செய்கைக்காக ஏக்கருக்கு அதிகபட்சமாக 7 இலட்சம் ரூபாய் வரையும் காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த சலுகை காப்பீட்டுத் திட்டமானது காட்டு யானைகளினால், அதிகம் பாதிப்புக்குள்ளான பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், அனுராதபுரம் மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களின் விவசாயிகளுக்கே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










