அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த நிறுவனத்தினர் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருளை விநியோகிக்கவுள்ளனர்.
இதற்கமைய இலங்கைக்குள் பிரவேசித்துள்ள நான்காவது வெளிநாட்டு நிறுவனமாக யுனைடட் பெற்றோலிய நிறுவனம் கருதப்படுகிறது.
இதுவரை இந்தியாவின் ஐ.ஓ.சி, சீனாவின் சினொபெக், அமெரிக்காவின் ஷெல் போன்ற நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் விநியோக பணிகளை முன்னெடுக்கின்றன.
அப் பட்டியலில் தற்போது அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனமும் இணைந்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇