மலையகத்திற்கான தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை மற்றும் ஹாலி எல புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி, இன்று காலை 8.30க்கு புறப்பட்ட புகையிரதம் ஒன்றே, இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், தடம்புரண்டுள்ள புகையிரதத்தை மீள தடமேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரததிணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇