அகில இலங்கை தேசியமட்ட போட்டிகளில் சாதனை படைத்த வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அகில இலங்கை தேசியமட்ட ஆங்கில தினப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவி உள்ளிட்ட விவசாய விஞ்ஞான போட்டிகளில் பங்குபற்றி சாதனை நிலைநாட்டிய வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு 20.11.2024 அன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக ஆங்கிலப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.வீ.மகேஸ்வரன் கலந்துகொண்டார்.

இதன் போது அதிதிகள் உள்ளிட்ட சாதனை மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து , அகில இலங்கை தேசியமட்ட ஆங்கில தினப் போட்டியில் தனி நிகழ்வான படைப்பெழுத்தாக்கம் (Creative Writing) போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்ற தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி சுரேஸ் ஷேசாங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதோடு , அகில இலங்கை தேசியமட்ட விவசாய விஞ்ஞான போட்டிகளில் பங்குபற்றி சாதனை நிலைநாட்டிய தரம் 11 மாணவிகளான ஏ.ஹன்நான், எம்.ஷாறுக்கா ஆகியோரும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாணவிகளை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் இவர்களது பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இது மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும். இந்த வெற்றியை தனதாக்கிக் கொண்ட மாணவியர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை பலரும் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை  படைப்பெழுத்தாக்கம் (Creative Writing) போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை பெற்ற மாணவி சுரேஸ் ஷேசாங்கி இவ்வாண்டு நடைபெற்ற பல தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி பல  வெற்றிகளை தனதாக்கிக் கொண்டு பாடசாலை சமூகத்திற்கும் மாவட்டத்திற்கும்  பெருமை சேர்த்துள்ளார்  என்பதுடன்,  இவர் தேசிய மட்ட உடற்பயிற்சி கண்காட்சியில் தலைமைத்துவத்தினை ஏற்றுநடாத்தி முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்ட அதேவேளை , அதில் சிறந்த தலைவருக்கான விருதினையும் தனதாக்கிக் கொண்டார்.

மேலும் அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் இலக்கிய நாடகம் போட்டி நிகழ்வில் பிரதான கதாபாத்திரமான பரதன் கதாபாத்திரம் தாங்கி நடித்திருந்தார்,

இந் நாடகம் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தைப் பெற்றிருந்தது.

இம்மாணவி இவ்வாறு இணைப்பாடவிதானம் சார்ந்த செயற்பாடுகளில் திறமையினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற அதேவேளை கல்விசார் நடவடிக்கைகளிலும் இவரின் செயற்பாடுகள் சிறப்புக்குரியதாக காணப்படுகின்றது.

இவர் கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர்களான சுரேஸ் மற்றும் ஜெயப்பிரபா ஆகியோரின் புதல்வியும் ஆவார் .

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects