மட்டக்களப்பில் அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான செயலமர்வு கல்லடி தனியார் விடுதியில் இன்று (04) இடம் பெற்றது.
செர்ட் (CERT) நிறுவன திட்ட முகாமையாளர திலின திசாநாயக்க தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பொது நிர்வாக அமைச்சும், இலங்கை செர்ட் நிறுவனம் இணைத்து அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது அரச அதிகாரிக்கு வழங்கப்பட்டது.
இலங்கை தேசிய இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணினி அவரச தயார்நிலை குழுவாக செர்ட் (CERT) நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
எதிர்வரும் வருடம் அரச நிறுவனங்களில் நவின டிஜிட்டல் மயமாக்கலின் உதவியுடன் புதிய செயலிகள் மூலம் சேவைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் நம்பகமான இணைய பாதுகாப்பு சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என இதன் போது வளவாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
மாவட்டத்தில் துறைசார் உத்தியோகத்தர்களுக்கு தகவல் பாதுகாப்பு தொடர்பான அறிவை மற்றும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு எதிர்காலத்தில் செயலமர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் இணைய பாதுகாப்பு தொடர்பான விளிப்பூட்டலை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை தெரிவு செய்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் தற்போதைய காலகட்டத்திற்கு இவ் தெளிவூட்டல் அவசியம் என்றார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் துறைசார் நிபுணர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇