முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை அமர்வுகள் இன்று (18.09.2025) ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை மின்சார சபை, 2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டணங்களில் 6.8 சதவீத அதிகரிப்பை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணையகத்திடம் சமர்ப்பிக்கலாம் எனவும் அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, வாய்மொழி கருத்துக்களைப் பெற, பொது பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகளை நடத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வாய்மொழி சமர்ப்பிப்புகளுக்கான பொது ஆலோசனை அமர்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல்: info@pucsl.gov.lk

வாட்ஸ்அப்: 076 427 1030

ஃபேஸ்புக்: www.facebook.com/pucsl

தபால் மூலம்:

மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை – 2025

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

6வது மாடி, சிலோன் வங்கி வர்த்தக கோபுரம்,

கொழும்பு 03.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects