அண்மையில் ஏற்பட்ட அசாதாரண மழை மற்றும் வெள்ளத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட – வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 78 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் ஜெனீவா தமிழர் உதயம் அமைப்பினரின் நிதிப் பங்களிப்பில், UMRF (Universal Mind Rising Foundation) நிறுவனத்தினால் 08 – 12 – 2024 அன்று வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவக்குடா கிழக்கு கிராம சேவகர் பிரிவில், கிராம சேவகரினால் அடையாளப்படுத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 78 குடும்பங்களிற்கான ஒரு வாரத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய உலர்உணவுப் பொதிகள் UMRF நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஸ்தாபகர் சி.லோகானன் தலைமையில் நாவக்குடா கிழக்கு கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் வைத்து வழங்கப்பட்டன.
இதில் 5kg அரிசி, 3kg கோதுமை மா, 1kg சீனி, 1kg பருப்பு, 1kg உப்பு, 400g நூடில்ஸ்,100g தேயிலை, 250g சோயா ஆகிய 8 பொருட்கள் அடங்கியிருந்தாகவும், இவ் வேலைத் திட்டத்திற்கான கிராமம் மற்றும் பயனாளிகள் என்பன மாவட்ட செயலகத்தினால் முன்மொழியப் பட்டிருந்ததாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மேலும் இதில் கிராம சேவகர் S. சாலமன் மற்றும் UMRF நிறுவன நிர்வாகிகள், உறுப்பினர்கள் பிரியா ஜெதீஸ்வரன், அழகையா திலகா, விஜயபரணி ஜயசுதன், சிவகுமாரன் ஸேஜகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇