கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, அப் பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காகக் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் நன்மையடையவுள்ளனர்.
இணையவழி மூலம் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான தினத்தை ஒதுக்கிக் கொள்வதற்காக நாளாந்தம் ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇