மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தினால் மகளிர் தினத்தை முன்னிட்டு “தென்றலில்” எனும் தொனிப்பொருளில் மணப்பெண் அலங்காரக்கண்காட்சி நிகழ்வு 10.03.2024 அன்று இடம்பெற்றது.
மாவட்ட அழகுக்கலை சங்க தலைவி வனிதா செல்லப்பெருமாள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி . ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டார்
மாவட்ட செயலக சிறுதொழில் அபிவிருத்தி பிரிவின் பயிற்சி மற்றும் வழிகாட்டலுக்கு அமைய மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட அழகுக்கலை சங்கம் மாவட்ட பெண் சிறுதொழில் முயற்சியாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் அழகுக்கலை பயிற்சிகளை வழங்கி வருகின்றன.
பயிற்றுவிக்கப்பட்ட அழகுக்கலை பயிற்சியாளர்களின் அழகுக்கலையினை காட்சிப்படுத்தும் மணப்பெண் அலங்கார கண்காட்சி நிகழ்வும் இடம்பெற்றது.
மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சாதனைப்பெண்களாக அழகுக்கலை பயிற்சியை நிறைவு செய்த பெண்களை அதிதிகள் கௌரவித்து விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தனர்.
இந் நிகழ்வில் அழகுகலை நிபுணர் பற்றிக் குயின்டா, துறைசார் நிபுணர்கள், அழகுக்கலை பயிற்றுவிப்பாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
அழகுக்கலை சங்கத்தினால் மாவட்டத்தில் பல சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇