மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு Work Force Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

Work Force Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் முழு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் Work Force Sri Lanka எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உயர் தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கிழக்கு மாகாண மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் 01.09.2025 அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய ஜஸ்டினா முரளிதரன் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளர் வி.மைக்கல் கொலினின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த செயலமர்விற்கு வளவாளராக அம்பாரை மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நிப்றாஸ் கலந்து கொண்டு செயலமர்வினை நடாத்தியிருந்தார்.

தற்போதைய தொழிற்துறைகளிற்கு ஏற்றாற்போல் உயர்தரத்திற்கு பின்னர் மாணவர்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் எவ்வாறான தொழிற்துறையினை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், நிகழ்நிலை ஊடாக மனித வள வேலை வாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமாலி உத்தியோகத்தர்களைத் தெளிவூட்டியிருந்தார்.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects