சர்வதேச நாணய நிதியத்தின் 5வது, 6வது இலங்கை தொடர்பான மறு ஆய்வுகள் இம் மாதம் மே 27 இல் பரிசீலிக்கிறது!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இம் மாதம் 27ஆம் திகதியை குறித்துள்ளது.

நிறைவேற்றுக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்ட பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான வழி திறக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மதிப்பாய்வுகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு, பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாக்கும் அதேவேளையில், செலவுகளை ஈடுசெய்யக்கூடிய மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணய முறைகளை மீண்டும் நிலைநிறுத்துவது ஒரு முக்கியமான முன்நிபந்தனையாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதிய செயற்குழு இம் மாதம் 27ஆம் திகதி இலங்கையின் கூட்டு மறு ஆய்வுகளை பரிசீலிக்கவுள்ளது

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது செயற்குழு இலங்கையின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மறுஆய்வுகள் குறித்து வரும் இம் மாதம் 27ஆம் திகதி தீர்மானிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த மறுஆய்வுக்கு சர்வதேச நாணய நிதிய செயற்குழு ஒப்புதல் அளித்தவுடன், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கிடைக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects