கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதியாக பேராசிரியர் எம்.சுகிர்தரன் தெரிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் புதிய பீடாதிபதியாக பேராசிரியர் முத்துக்குமாரன் சுகிர்தரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வியை கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலை கல்வி மற்றும் உயர்தரக் கல்வியை புனித மிக்கேல் கல்லூரி, கொழும்பு விவேகானந்தா கல்லூரி என்பவற்றில் பூர்த்தி செய்துள்ளார். கலாநிதி பட்டத்தை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் முதுகலை பட்டத்தை இந்தியாவின் Mahatma Phule Agricultural University இலும் BSc Agriculture (hons) பட்டத்தை கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.

23 ஆண்டுகளுக்கு மேலான பல்கலைக்கழக சேவையை கொண்டுள்ள பேராசிரியர் சுகிர்தரன் கற்பித்தல், ஆய்வு மற்றும் கல்வி நிர்வாக துறைகளில் பங்களிப்பு வழங்கியுள்ளார். தற்போது விவசாய பீடத்தின் விவசாய பொறியியல் துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

மேலும், தொழில்நுட்ப பீடத்தின் பல்துறை கற்கைகள் துறைத் தலைவர் மற்றும் உயிரியல் அமைப்புகள் தொழில்நுட்பத் துறையின் பதில் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.

கல்வி பொறுப்புகளுக்கு மேலாக, அவர் தற்போது கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் சுகிர்தரன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஓய்வு பெற்ற உதவி பதிவாளர் நாயகம் எஸ். முத்துக்குமாரன் மற்றும் தேவலட்சுமி தம்பதிகளின் மகனுமாவார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects