“இயன்றதைச் செய்வோம் இருக்கும் வரை செய்வோம்” எனும் தொனிப்பொருளில் ஜீவ ஜோதி பவுண்டேஷனின் இயக்குநர் ஜீ. எழில்வண்ணன் தலைமையில் மட்டக்களப்பு சித்தாண்டி-2 பிரதேசத்தில் வாழும் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் 08/12/2024 அன்று பகிர்ந்தளிக்கப்பட்டன .
இதன்போது செங்கலடி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர், சித்தாண்டி 2 கிராம சேவை உத்தியோத்தர், ஜீவஜோதி அமைப்பின் உறுப்பினர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதற்கான நிதி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1991 ஆம் ஆண்டில் கல்வி கற்றவர்களாலும், நண்பர்களின் தனிப்பட்ட நிதி பங்களிப்பினாலும் பெறப்பட்டன என எழில்வண்ணன் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇