மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காண்பது அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பபில் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் அதிக அளவு டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களாக வீடுகள், அரச மற்றும் அரச சாரா திணைக்களங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே இந்த அபாயகரமான சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை போதிய கவனத்தை செலுத்தி, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய சூழல் அற்ற இடமாக வைத்திருக்குமாறும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், எலி காய்ச்சல் அபாயம் இருப்பதனால் விவசாயிகளும் வயல் நிலங்களை அண்டி வசிப்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருப்பதுடன், காய்ச்சல் ஏற்படுமிடத்து அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தார்.
அது மட்டுமல்லாது இது பண்டிகை காலம் என்பதனால் பொது போக்குவரத்தில் பிரயாணத்தில் ஈடுபடும் பயணிகள் உணவு உண்பதற்காக நிறுத்தப்படும் உணவு சாலைகளில் தமக்கு தரமான உணவு விநியோகிக்கப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் எமக்கு அறிவிக்குமிடத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇