இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று (12.12.2024) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 177,311 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவு வரவு வைக்கப்படவுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவை இரண்டு கட்டங்களாக நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த 4 இலட்சம் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான நலன்புரி நன்மைகள் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முடிவடையவிருந்த மேலும் 4 இலட்சம் பயனாளிகளுக்கான நலன்புரி நன்மைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇