“எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் – பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.” எனும் தொனிப்பொருளில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்து போயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில் புனரமைப்புச் செய்து அவற்றை பிரதேச விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வானது 12.10.2023 அன்று இடம்பெற்றது.
பெண்கள், சிறுவர்கள் உட்பட 1772 வறுமைக்குட்பட்ட குடும்பங்களை நேரடி இலக்காகவும் 2043 குடும்பங்களை மறைமுக இலக்காகவும் கொண்டு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்களுமே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கொகாகோலா பவுண்டேஷன் அமைப்பின் இலங்கை மாலைதீவு நாடுகளுக்கான பிராந்திய இணைப்பாளர் லக்ஷான் மதுரசிங்ஹ, சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிகாமணி மயூரன், வாகரைப் பிரதேச செயலாளர் ஜி.அருணன், விவசாய, நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பின் அலுவலர்கள் உட்பட விவசாயிகள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇