மட்டக்களப்பில் “ஏற்றம்” உளநல மையம் புனர்நிர்மானம் செய்து திறந்து வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

ஜப்பான் அரசின் நிதி அனுசரனையுடன் ஐக்கிய நாடுகள் சபை (UNFPA) நிறுவனமும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRC) நிறுவனமும் இணைந்து புனர்நிர்மானம் செய்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் “ஏற்றம்” உளநல மையம் 12.12.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி டான் சௌந்தரராஜன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், ஐக்கிய நாடுகள் சபையின் (UNFPA) இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRC) உப தலைவர் ஜெகத் அபேயசிங்க (Jehath Abayasingah), பிராந்திய சுகாதார பணிமனையின் தகவல் தொடர்பாடலுக்கான பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் நவலோஜிதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது அதிதிகள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு, நினைவுப் படிகம் அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து, குறித்த உளநல மையம் தொடர்பான சேவைகள் அடைவுகள் தொடர்பான அழிக்கை செய்யப்பட்டதினைத் தொடர்ந்து அதிதிகள் உரையின் பின்னர் புனர்நிர்மானம் செய்யப்பட்ட உளநல மையத்தின் ஒப்படைப்புச் சான்றிதழ் UNFPA நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதியினால் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உளநல வைத்திய நிபுணர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் UNFPA மற்றும் SLRC அமைப்புக்களின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறுவர், இளம்பருவத்தினர் நட்புசூழல், ஆலோசனை பரிந்துரை மையம், மனநல நுகர்வோர் அமைப்பு, மனநல தன்னார்வ தொண்டர் அமைப்பு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த “ஏற்றம்” உளநல மையம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உளவியல் சமூக மையமானது சமூகத்தின் மனநலம் மற்றும் உளவியல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முக்கிய மையமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயல்படுவதுடன், இங்கு குடும்ப ஆலோசனை, இளம்பருவ மனநல ஆதரவு, பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார கல்வி போன்ற இளம் பருவத்தினருக்கான நட்பு சேவைகள் மற்றும் தற்கொலை தடுப்பு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை போன்ற சிக்கல்களுக்கான நெருக்கடி தலையீடுகள் உட்பட பலதரப்பட்ட சேவைகளை வழங்குகிறது.

அத்தோடு ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை வழங்குவதன் மூலம், உளவியல் சமூக சவால்களை திறம்பட கண்டறிந்து அவற்றை எதிர்கொள்ள அவர்களைச் சித்தப்படுத்துவதன் மூலம் இந்த மையம் சமூக வலுவூட்டலுக்கு முன்னுரிமை அளிக்கிறது. கடந்த ஆண்டில், இந்த மையம் 680 க்கும் மேற்பட்ட ஆலோசனை அமர்வுகளை நடத்தியதுடன் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் வாடிக்கையாளர் திருப்தியின் உயர் மட்டத்தை அடைந்துள்ளதுடன், அனைத்து தரப்பினருக்குமான பயிற்சியை மேம்படுத்துவதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் சக உதவித் திட்டங்கள், டிஜிட்டல் மனநலக் கருவிகள், தினப்பராமரிப்பு வசதி, மொபைல் அவுட்ரீச் யூனிட் மற்றும் அறிவு மையம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் மையம் தனது சேவைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இந்த முன்முயற்சிகள் பிராந்தியத்திற்கு பரந்த மற்றும் உள்ளடக்கிய மனநல ஆதரவை உறுதி செய்யவுள்ளமையினை கருத்திற் கொண்டே குறித்த மையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects