சில ஐஃபோன் வகைகளில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
அத பிரகாரம் , சில பழைய ஐஃபோன்களில் வட்ஸ்அப் (WhatsApp) சேவை மே 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.
அதன்படி, ஐஃபோன் 5எஸ் (iPhone 5s), ஐஃபோன் 6 (iPhone 6) மற்றும் ஐஃபோன் 6 பிளஸ் (iPhone 6 Plus) ஆகிய வகைகளில் இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெட்டா நிறுவனம் மே 5ஆம் திகதியில் இருந்து சில வகை ஐஃபோன்களில் வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், 5 மாதங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









