அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பெரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் விளையாடப்பட்ட கிரிக்கெட், 128 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறவுள்ளது.
கிரிக்கெட்டுடன் சேர்த்து பேஸ்போல், ஸ்குவாஷ் உள்ளிட்ட சில விளையாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டம் மும்பையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படலாம் என சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிந்துரைத்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇