மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, உலக வங்கியின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக, மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம் 23.09.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சனகெளரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற ஆரையம்பதியில் ஸ்மைலிங் கிட்ஸ் பகல் நேர பராமரிப்பு நிலையம் மற்றும் பாலர் பாடசாலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டு பாடசாலையை திறந்துவைத்தார்.
மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை பராமரிக்கும் நிலையம் இன்மையால் குழந்தைகளை பாராமரிப்பதில் சிக்கலை எதிர் நோக்கியிருந்தனர். இதனை தீர்த்து வைக்கும் முகமாக இப்பிரதேசத்தில் குழந்தை பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம பொறியாளர் ரீ.சுமன், மட்டக்களப்பு வலயக்கல்வி உதவி பணிப்பாளர் அனுரேகா, மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வி.முரளிதரன் மற்றும் உயர் அதிகாரிகள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் அதிதிகளினால் பயன் தரு மரங்கள் பாலர் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










