நாட்டில் தரமான மற்றும் சிறந்த சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் அமைச்சில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதன்போது, புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள வைத்தியர் சந்திரிக எபிட்டகடுவ மற்றும் செயலாளர் வைத்தியர் பண்டார வரககொட உள்ளிட்ட குழுவினருக்கு அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, தற்போது தீவிரமடைந்து வரும் டெங்கு நோய் பரவல் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சையளிக்கும் போது விசேட நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக வைத்தியர் சங்கத்தினர் இதன்போது உறுதியளித்ததுடன், தமது தரப்புத் தொழில்சார் தேவைகள் குறித்தும் அமைச்சருடன் கலந்துரையாடினர்.
இக்கூட்டத்தில் சங்கத்தின் உப தலைவர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.
இக் கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் வைத்தியர் சந்திக எபிடகடுவ , செயலாளர் வைத்தியர் பண்டார வரகாகொட, உப தலைவர்களான வைத்தியர் ருக்மல் குணதிலக்க , வைத்தியர் நலிந்த ஹேரத், வைத்தியர் செனித லியனகே , வைத்தியர் சமிந்த குணதிலக, உதவிச் செயலாளர்கள் வைத்தியர்கள் பாலித ராஜபக்ஷ, பிரபாத் சுகததாச, வைத்தியர் சமில் விஜேசிங்க, வைத்தியசர் ஷஷிக விதானகே , வைத்தியர் லசித் தம்மிக்க, வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய உள்ளிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










