நாட்டு மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டம் 05.02.2024 அன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன் தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுமார் பன்னிரண்டாயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் நாளை வழங்கப்பட உள்ளதாகவும், எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇