ஒரே நாளில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்த தினமாகக் கடந்த புதன்கிழமை (11.12.2024) பதிவாகியுள்ளது.
இதன்படி, குறித்த நாளில் 9,847 பேர் நாட்டுக்கு வந்துள்ளதாகச் சுற்றலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்த மாதத்தின் கடந்த 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 68,648 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஒரே நாளில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்த தினமாக, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி முன்னதாக, பதிவாகியிருந்தது.
அத் தருணத்தில் 8,696 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்திருந்தனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










