இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.5 சதவீத நேர்மறை மாற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தேசிய கணக்குகள் மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 29 இலட்சத்து 87,544 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 31 இலட்சத்து 51,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், விவசாய பொருளாதார நடவடிக்கைகள் 3 சதவீதமாகவும், தொழில்துறை நடவடிக்கைகள் 10.8 சதவீதமாகவும், சேவை பொருளாதார நடவடிக்கைகள் 2.6 சதவீதமாகவும் விரிவடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇