2024ஆம் ஆண்டின் 2ஆவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, 3 முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார குறிகாட்டி தெரிவித்துள்ளது.
அதன்படி, விவசாய நடவடிக்கை 1.7 சதவீதமும், கைத்தொழில் நடவடிக்கை 10.9 சதவீதமும், சேவை நடவடிக்கைகள் 2.5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காணப்பட்ட வளர்ச்சி நிலைமையானது, தொடர்ந்தும் அவ்வாறு பேணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், 2ஆம் காலாண்டின் செயல்திறன் 1ஆம் காலாண்டில் எட்டப்பட்ட 5.3 சதவீத வளர்ச்சியைவிட குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇