ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
39 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 65 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 3,503 ஓட்டங்களையும், ஒருநாள் போட்டிகளில் 707 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன், இருபதுக்கு 20 போட்டிகளில் 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇