மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
உன்னிச்சை குளத்தில் கனமழையினால் 68 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி 33.0 அடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
உறுகாமக் குளத்தில் 79 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி 15.8 அடி நீர்மட்டமும், வாகனேரி குளத்தில் 80.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி 19.2 அடி நீர்மட்டமும், கட்டுமுறிவு குளத்தில் 39 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி 12.0 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நவகிரி பகுதியில் 66.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மட்டக்களப்பு பகுதியில் 123.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணி பகுதியில் 47.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மயிலம்பாவெளி பகுதியில் 131.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கிரான் பகுதியில் 126.1 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பதிவாகியுள்ளன.
மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் மழைநீர் வழிந்தோட முடியாமல் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
மழையினால் மக்களளின் அன்றாட நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇