கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 17.12.2024 அன்று 16.02 புள்ளிகள் அதிகரித்து 14,516.46 ஆக உள்ளது.
பங்குச் சந்தையில் 17.12.2024 அன்றைய தினம் பதிவான மொத்த புரள்வு 6.3 பில்லியன் ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச்சந்தையின் இந்த வளர்ச்சியின் காரணமாக முதலீட்டாளர்களின் ஈர்ப்பு மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் தடவையாக 16.12.2024 அன்று 14,500 புள்ளிகளைக் கடந்தது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇