நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்களினதும் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் ஆயுதம் தரித்த முப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அமுலாகும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகியவற்றின் சிப்பாய்களை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான கட்டளை அடங்கிய அதிவிஷேட வர்த்தமானி நேற்று வெளியானது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது சரத்திற்கமைய ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரத்தின் பிரகாரம் ஆயுதம் தரித்த பாதுகாப்பு தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வர்த்தமானி அறிவித்தலானது மாதாந்தம் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇