கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.12.2024 அன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரும் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரனின் தலைமையின் கீழ் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலர் எஸ்.முரளிதரனின் வரவேற்புரையுடன் இக் கூட்டம் ஆரம்பமானது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.சிறீபவானந்தராஜா, இராமநாதன் அர்ச்சுனா, சிவஞானம் சிறீதரன் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செ.கஜேந்திரன் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், எனப் பலர் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇