இலங்கையிலுள்ள காட்டு யானைகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சூழலியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காட்டு யானைகள் தொடர்பான ஆய்வாளரும் சூழலியலாளருமான ஜானக மங்கல இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் 10 வருடங்களுக்கு மேலாக நாட்டில் காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக 2011ஆம் ஆண்டளவிலேயே காட்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன. இறுதி கணக்கெடுப்பின் படி நாட்டில் ஐயாயிரம் காட்டு யானைகளே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வருடாந்தம் 400 காட்டு யானைகள் இறப்பதாக காட்டு யானைகள் தொடர்பான ஆய்வாளரும் சூழலியலாளருமான ஜானக மங்கல தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇