இரண்டாவது ‘இலங்கை பொருளாதார உச்சி மாநாடு-2023’ அடுத்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் போது குறிப்பாக பொருளாதார சீர்திருத்தங்களுக்கான அவசியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சாத்தியமான தாக்கம் என்பன குறித்து கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது தவிர, மறுசீரமைப்பு மூலம் ஏற்படும் மாற்றம், மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அபிவிருத்தி செய்வதில் தொழிலாளர்களின் பங்கு என்பன அமர்வின் மையமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் வேலைவாய்ப்பு அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உட்பட தொழில் அமைச்சு போன்றவற்றின் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇