மலேசியாவில் இம் மாதம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை மகளிர் அணி அதற்கு முன்னோடியாக இளையோர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் மகளிர் அணியை எதிர்த்தாடவுள்ளது.
இத் தொடரை முன்னிட்டு மொறட்டுவை, பிறின்சஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரி வீராங்கனை மனுதி நாணயக்கார தலைமையிலான 15 வீராங்கனைகளைக் கொண்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி பெயரிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்ற அதே வீராங்கனைகள் பங்களாதேஷுக்கு எதிரான தொடரிலும் விளையாடவுள்ளனர்.
அணியின் உப தலைவியாக மாத்தறை அனுரா கல்லூரி வீராங்கனை ரஷ்மிக்கா செவ்வந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் குழாத்தில் ரத்கமை, தேவபத்திராஜ கல்லூரியைச் சேர்ந்த 6 வீராங்கனைகள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணிகள் 4 போட்டிகள் கொண்ட சர்வதேச இளையோர் ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன.
இத் தொடரில் விளையாடவுள்ள 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி இன்று இலங்கை வந்தடைந்தது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு சர்வதேச இளையோர் ரி20 கிரிக்கெட் போட்டிகள் தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை 3ஆம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை 5ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
மூன்றாவது போட்டி மக்கொன சரே விலேஜ் மைதானத்தில் ஜனவரி 7ஆம் திகதியும் கடைசிப் போட்டி பி.ஆர்.சி. மைதானத்தில் ஜனவரி 9ஆம் திகதியும் நடைபெறும்.
19 வயதின்கீழ் இலங்கை மகளிர் குழாம்
மனுதி நாணயக்கார (தலைவி – மொறட்டுவை பிறின்சஸ் ஒவ் வேல்ஸ்), ரஷ்மிக்கா செவ்வந்தி (உப தலைவி – மாத்தறை, அனுரா கல்லூரி), விமோக்ஷா பாலசூரிய (திருகோணமலை சிங்கள ம.வி.), ஹிருணி ஹன்சிகா, சுமுது நிசன்சலா, ரஷ்மி நேத்ராஞ்சலி, சஷினி கிம்ஹானி, சஞ்சனா காவிந்தி, ஷெஹாரா இந்துவரி (அறுவரும் ரத்கமை, தேவபத்திராஜ கல்லூரி), தஹாமி சனுத்மா (நுகேகொடை, அநுலா வித்தியாலயம்), அஷேனி தலகுனே (கண்டி, மஹமாயா மகளிர் கல்லூரி), ப்ரமுதி மெத்சரா (அம்பாறை உஹன மத்திய கல்லூரி), சமோதி ப்ரபோதா (மொணராகலை. பஞ்ஞானந்த மகா வித்தியாலயம்), தனுலி தென்னக்கூன் (குருநாகல், மாலியதேவ மகளிர் கல்லூரி), லிமன்சா திலக்கரட்ன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇