சிகிரிய பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் வன அபிவிருத்தி திணைக்களம், சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் , வன ஜீவராசிகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, தம்புள்ளை பிரதேச செயலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு முதலுதவி நிலையங்கள் இல்லாமை, முறையான மின்விளக்குகள் இல்லாமை, தண்ணீர் வசதிகள் இல்லாமை மற்றும் ஒழுங்கற்ற கழிப்பறைகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇