சுழலும் 57 மின்விசிறிகளை தனது நாக்கினால் தடுத்து நிறுத்தி இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கானாவின் சூர்யாபேட்டையைச் சேர்ந்த கிராந்தி குமார் பணிகேரா- டிரில்மேன் என்ற நபர் பங்கேற்றார்.
இயங்கி கொண்டிருந்த 57 மின் விசிறிகளை 1 நிமிடத்துக்குள் தனது நாக்கினால் நிறுத்தியுள்ளார்.
தனது நாக்கை பயன்படுத்தி அவர் மின் விசிறிகளின் சுழலும் விசிறிகளை நிறுத்தும் காணொளியை கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு அதன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇