கொழும்பில் நடைபெற்ற இரத்தினகற்கள் கண்காட்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கொழும்பு இரத்தினகற்கள் கண்காட்சியில் 100 கோடி ரூபாய் பெறுமதியான பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினகற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சி வாரயிறுதி நாட்களில் கொழும்பு – உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த கண்காட்சியில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அதிகளவில் பங்குபற்றினர்.

அதில் சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொள்வனவாளர்கள் கலந்துகொண்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் , குறித்த கண்காட்சியின் போது , 20 கரட் ப்ளு சஃபாயர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு 2.5 கோடி ரூபாயாகும் என மதிப்பிடப்படப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects