அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்திற்கு தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇