கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச கலை இலக்கிய விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 29.11.2023 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.றஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், பிரதேச கலாசார அதிகார சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.சித்திக், கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பிரதேச கலை இலக்கிய போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்ற மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வினை கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம் தொகுத்து வழங்கியதோடு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.சிந்துஉஷா, அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.கோவிந்தராசா, வீ.சந்திரகாந்தன் மற்றும் திருமதி.வ.அருணகிரிநாதன் ஆகியோர் நிகழ்விற்கான ஒருங்கிணைப்புக்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇