அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும் என கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2023ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 31,951 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதுடன் 75 இலட்சத்து 41,282 மில்லியன் ரூபா திறைசேரி பில்கள் மூலமாகவும் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023ஆம் ஆண்டு பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அளவு 67.4 சதவீத அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின் படி, 2023ஆம் ஆண்டு தனிநபர் கடன் பெறுமதியும் அதிகரித்துள்ளதாகவும், அது 13 இலட்சத்து 22,793 ரூபாவாகும் எனவும் கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டில், தனிநபர் கடன் தொகை 12 லட்சத்து 34,358 ஆக இருந்த நிலையில் இது ஒரு வருடத்தில் 88,435 ரூபாய் அதாவது 7.16 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு அளவு வலுவாக இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇