தைப்பொங்கல் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணங்களை முன்னெடுப்பவர்கள், போதுமான அளவு போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறுவதில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பணிபுரிபவர்களில் பலர் 12.01.2025 அன்றைய தினம் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காகக் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் பிரதான பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது .
இதேநேரம் , தைப்பொங்கல் மற்றும் நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பல விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் பதுளைக்கும் விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக புகையிரத பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் போதியளவு போக்குவரத்து வசதிகள் இடம்பெறவில்லை எனத் தெரிவித்தனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










