மட்டக்களப்பில் வெள்ளபெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவக்குடா மற்றும் பெரிய உப்போடை பகுதிகளைச் சேர்ந்த அரசாங்க நிவாரணம் கிடைக்கப் பெறாத வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அரசாங்கத்தில் தொழில்புரியாத வறிய குடும்பங்களைச் சேர்ந்த தேவையுடய சுமார் எழுபத்தைந்து குடும்பங்களுக்கு “திருமதி.ராஜேஸ்வரி சந்திரபாலன் நிறுவனர் ஜெனிவா தமிழ் கலை கலாசார நாகபூசணி சிவசக்தி பீடம்”அம்மணியின் பூரண நிதி அனுசரனையில் , பிரதேச செயலாளர் முன்னிலையில் UMRF ஸ்தாபகர் திரு.சி.லோகானன் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
மண்டபத்தில் வைத்து 03.01.2025 அன்று வழங்கப்பட்டன.

நிகழ்வில் மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் , திருமதி.ராஜேஸ்வரி சந்திரபாலன் சார்பில் கலந்து கொண்ட பிரின்ஸ் , UMRF நிர்வாகத்தினர் பயனாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது உதவி மாவட்டச் செயலாளர்ரின் வேண்டு கோளுக்கு இணங்க கிராம சேவகர்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் எழுபத்தைந்து குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects