உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 21ஆவது போட்டி நேற்று(22) தர்மசாலாவில் இடம்பெற்றது. இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய இந்த போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சுப்மன் கில் 26 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்திருந்தார். இதன்படி, இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2,000 ஓட்டங்களை கடந்தார். சுப்மன் கில் 38 போட்டிகளில் இவ்வாறு 2,000 ஓட்டங்களை கடந்துள்ளதுடன், குறைந்த இன்னிங்ஸில் 2,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக் கொண்டார். முன்னதாக தென்னாபிரிக்க அணியின் ஹசிம் அம்லா 40 போட்டிகளில் 2,000 ஓட்டங்களை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇