அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு பற்றாக்குறை இருக்காது என எதிர்பார்க்கப்படுவதால், வெளிநாடுகளுக்கு முட்டைகளை ஏற்றுமதி செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், டிசம்பர் மாதம் வரையில் மாத்திரம் இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வது அவசியமாகும். ஜனவரி மாதத்திற்குள், நாட்டில் நுகர்வுக்குத் தேவையான முட்டைகளின் எண்ணிக்கையை நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்.
“இலங்கைக்கு முட்டை மற்றும் அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும், குறைந்த அளவு அரிசி மற்றும் முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. சந்தையில் வாங்குபவர்களை பாதுகாக்கும் நோக்கில் இது செய்யப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
பொதுவாக, நம் நாடு பல நாடுகளுக்கு முட்டை, சிக்கன், சாசேஜ் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வந்தது. சர்வதேச சந்தையில் வாங்குபவர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நீண்ட காலமாக இது செய்யப்பட்டது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇